திருத்தணி: திருத்தணி நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த திருத்தணி நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. திருத்தணி நகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. வெறிப்பிடித்து திரியும் இந்த நாய்கள், மக்களை கடித்து குதறி வந்தன. இதனால் நாய்களை பிடிக்க வேண்டும் என்று நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நாய்களை பிடிக்கவும் குடும்ப கட்டுப்பாடு செய்யவும் நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உத்தரவிட்டனர். இதன்படி நேற்று, திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி ஊழியர்கள்பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் நாய்களுக்கு இனபெருக்க தடை அறுவை சிகிச்சை செய்தனர். நேற்று மட்டும் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook