ஆவின் பணியாளர்களுக்கு இலவச நெய், பால்கோவா
கோவை: தமிழ்நாடு முழுவதும் 17 ஒன்றிய ஆவின் நிறுவனங்களில் 6,300 ஊழியர்கள், 8,719 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 21,362 ஊழியர்கள் என மொத்தம் 27,662 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கலையொட்டி அரை கிலோ நெய், அரை கிலோ பால்கோவா ஆகியவற்றை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு ஊழியருக்கு ரூ.145 மதிப்புள்ள நெய், ரூ.150 மதிப்புள்ள பால்கோவா வழங்கப்படுகிறது. ஒன்றிய ஆவின் நிறுவனங்கள் மூலம் இவை பொங்கலுக்குள் வினியோகிக்கப்படுகிறது. கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 1,500 ஊழியர்கள், ஒன்றிய ஆவின் நிறுவனத்தில் 400 ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.