20-20 கேப்டன் பதவியில் டோனி விலக வேண்டும் : சொல்கிறார் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் அளித்த பேட்டி: டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட டோனிக்கு எல்லா தகுதியும் உள்ளது. அவரை விட சிறந்த கேப்டன் வேறு யாரும் கிடையாது. எனினும் அனைத்து நேரங்களிலும் எல்லா வகையான ஆட்டங்களுக்கும் கேப்ட னாக இருந்தால் சலிப்பு ஏற்பட்டு விடும். 2020, ஐபிஎல் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலக வேண்டும். அதே நேரத்தில் இந்த வகையான ஆட்டத்திலும், ஒருநாள் போட்டியிலும் சாதாரண வீரராக நீடிக்க வேண்டும்.
கேப்டன் பதவிக்கு டோனியை தவிர மாற்று வீரர் யாரும் இல்லை. காம்பீரை நியமிக்கலாம் என்று யோசித்தால், அவர் டெஸ்ட் போட்டி யில் தற்போது சொதப்பி வருகிறார். 3 விதமான போட்டிகளுக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமிக்கலாம். இதை விரைவில் செய்ய முடியாது. இளம் வீரரான அவருக்கு சிறிது காலம் தேவைப்படும். டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை மீண்டும் வலுவான நிலைக்கு கொண்டு வந்த பின்னர் கேப்டன் பதவியை டோனி வேறு யாரிடமாவது கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.