வேல்டு ஹீரோ, ரூப பட ரிலீஸ் தேதிய பொங்கலுக்கப்புறம் 10 நாள் தள்ளி அனவுன்ஸ் பண்ணியிருக்காரு. இது ஆடியன்ஸுக்கு இனிப்பா இருந்தாலும் பெல் இயக்கம், காட்டன் வீர இயக்கத்துக்கு கசப்பா இருக்காம். பொங்கல் ரிலீஸ்லயிருந்து தங்களோட படங்கள தள்ளி ரிலீஸ் பண்ண நெனச்சிருந்த இயக்குனருங்க இப்ப வேற தேதி பாக்க வேண்டி இருக்காம். அடுத்த மாசம் லவ்வர்ஸ் டேக்கு பட ரிலீஸ தள்ளி போறதுபத்தி ரெண்டு தரப்புலேயும் பேசிக்கிட்டிருக்காங்களாம்... இருக்காங்களாம்...
பஞ்ச் நடிகரோட கன் படம் நூறு கோடி கலெக்ஷன் பண்ணிருச்சின்னு அந்த பட தயாரிப்பு அலப்பறை பண்றாராம்... பண்றாராம்... இதை கேட்டு வினியோகஸ்தருங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... அடிச்சிக்கிறாங்களாம்... பஞ்ச் நடிகரை வச்சி லாபம் பார்த்த ருசி, திரும்ப அவரோட கால்ஷீட்டுக்காக தயாரிப்பை காக்க வச்சிருக்காம். அதுக்குதான் இப்படி பில்டப் பண்றாராம்... பண்றாராம்...
ஆனந்த இயக்கத்தை அட்வான்ஸ் கொடுத்து மடக்க பார்த்த தயாரிப்புங்க திடீர்னு ஜகா வாங்கிட்டாங்களாம். செவன்த் சென்ஸ் ஹீரோவோட படம் ரிலீசுக்கு முன்னாடி வரை ஆனந்த இயக்கத்தை அந்த தயாரிப்புங்க சுத்தி சுத்தி வந்தாங்களாம்... வந்தாங்களாம்... இப்போ யார் வருவாருன்னு வழி மேல் விழி வச்சி இயக்கம் காத்து கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook