Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
10
Jan
சம்பா சாகுபடி பாதிப்பு அமைச்சர்கள் குழு நாகையில் ஆய்வு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மயிலாடுதுறை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரியில் தண்ணீர் இல்லாததாலும்  காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீரை நம்பி சம்பா சாகுபடி செய்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி விட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பல விவசாயிகள் இறந்தனர். சிலர்  பயிர் கருகியதாலும், கைமுதலும் இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அரசு உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தாமோதரன், நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், செல்லூர் ராஜூ, வைத்திலிங்கம், காமராஜ், கே.பி.முனுசாமி ஆகிய 8 பேரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முனியநாதன், சிவதாஸ் மீனா உள்ளிட்ட 17 பேரும் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில் இன்று உயர்நிலை ஆய்வுக்குழு  டெல்டா மாவட்ட சேதப்பகுதிகளை பார்வையிட சுற்றுப்பயணத்தை தொடங்கியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளியப்பநல்லூரில் இருந்து ஆய்வு பயணத்தை தொடங்கினர். இவர்கள் கருகிய பயிர்களை பார்த்து அந்தந்த பகுதி விவசாயிகளிடம் விசாரித்தனர். விவசாயிகள் ஆங்காங்கே திரண்டு வந்திருந்து  செலவு செய்த பணம் எல்லாம் வீணாகிவிட்டது என கண்ணீர் மல்க கூறினர். அவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் அங்கிருந்து  தரங்கம்பாடி, தெத்தி, ஆகியபகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஈசனூர், ஆலங்குடி, மணக்குடி, வாய்மேடு ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana