ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ சிறையில் அடைப்பு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருகடம்பூர் சங்கரன் தெருவில் வசித்து வருபவர் தர்மன் (66). இவரது மகள் சத்யபிரியா (21). வேலூரில் உள்ள கல்வியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையில் செஞ்சி வந்திருந்தார். புத்தாண்டு அன்று இரவு வீட்டில் தூங்கினார். 2ம் தேதி காலை தர்மன் எழுந்து பார்த்த போது, மகளை காணவில்லை. இது குறித்து தர்மன் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதில், செஞ்சி அடுத்த செம்மேட்டை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் வேலவன் (30) தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், உடந்தையாக அவரது தந்தை ஆதி, தாய் கோவிந்தம்மாள், உறவினர்கள் குட்டி, அபிராமி, சிவகாமி, மற்றொரு அபிராமி ஆகியோர் செயல்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி, ஆசிரியர் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.