Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
10
Jan
பயணிகள் இறங்க நிறுத்திய போது பாலத்தில் மோதியது கப்பல் 57 பயணிகள் படுகாயம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

நியூயார்க்: அமெரிக்காவில் பயணிகள் கப்பல் பாலத்தில் மோதியதில் 57 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள அட்லான்டிக் ஐலேண்ட் கடல் பகுதியில் இருந்து Ôசீ ஸ்டிரீக்Õ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது. லோயர் மான்ஹாட்டன் துறைமுக பகுதி பாலத்தில் கப்பலை நிறுத்தும் போது, எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி யது. இதில் கப்பலில் இருந்து இறங்க தயாராக இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். காலை 8.43 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.

Ôதகவல் அறிந்து தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் விரைந்து வந்தனர். கப்பலில் 400 பயணிகள் இருந்துள்ளனர். படுகாயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலருக்கு அந்த இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். இதில் 57 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுÕ என்று நியூயார்க் போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கு உள்ளான கப்பல் தனியாருக்கு சொந்தமானது. விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana