நல்ல காலம் பொறக்குது.... நல்ல காலம் பொறக்குது...
மிரட்ற படத்துல நடிச்ச வினயமான ஹீரோ சம்பளத்த உசத்திட்டாராம்... உசத்திட்டாராம்... இதனால அவர தேடிபோறதா இருந்த தயாரிப்புங்க அப்படியே ஸ்டாப் ஆயிட்டாங்களாம். இதுபத்தி கேள்விப்பட்ட நட்புங்க சிலர் இந்த மேட்டர ஹீரோ காதுல ஓதுனாங்களாம். இத கேட்டு உஷாரான ஹீரோ சம்பளத்த குறைச்சி இருக்க¤றதா தெரிஞ்சவங்க மூலமா மேட்டர கசிய விடுறாராம்... விடுறாராம்...
கிரிக்கெட் வீரர்களோட தொடர்புபடுத்தி வர்ற கிசுகிசுக்கள் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பிடிக்குதாம்... பிடிக்குதாம்... எவ்வளவு கிசுகிசு வந்தாலும் லட்சுமிகர நடிகை கண்டுக¤றதில்லையாம். இப்படியொரு கிசுகிசுக்காக சான்டல்வுட் ஹீரோயின்களும் ரொம்பவே ஆசைப்படுறாங்களாம். திவ்யமான ஹீரோயினுக்கு இந்த வருஷ தொடக்கமே குஷியா அமைஞ்சிடுச்சாம். ராகுலான வீரரோட அவர் நடிச்ச ஒரு ஆட் படம்தான் இந்த குஷிக்கு காரணமாம். தன்னை பத்தி சர்ச்சை செய்தி வந்தா உர்ராகுற நடிகை, வீரரோட சம்பந்தப்படுத்தி கிசு கிசு வந்தா அத கண்டுக்க மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்...
பாலிவுட்போன இலி நடிகையை நைட்பார்ட்டில கலந்துக்கச்சொல்லி நெறயபேர் கூப்பிடுறாங்களாம்... கூப்பிடுறாங்களாம்... எதுக்கும் போகாம எஸ்கேப் ஆயிடுறாராம். தன்னோட நெருக்கமான ஒரு தோழி கெடச்சா இந்தமாதிரி பார்ட்டிக்கெல்லாம் தைரியமா போகலாம்னு நெனச்சிட்டிருந்தவருக்கு தமன நடிகை கைகொடுக்க முடிவு பண்ணிருக்காராம். சவுத்ல நடிச்சப்ப ரெண்டுபேரும் திக் பிரண்டா இருந்தாங்களாம். இப்ப ரெண்டுபேருமே பாலிவுட்ல கவனம் செலுத்துறதால ஒருத்தருக்குகொருத்தர் உதவியா இருக்க முடிவு பண்ணிஇருக்காங்களாம்... இருக்காங்களாம்...
|