ராட்சத பலூன் விழுந்து திருமண கோஷ்டி காயம்
சாண்டியாகோ: அமெரிக்காவின் சாண்டியோகோ நகரை சேர்ந்த ஜோனாதன் நார்சிசி கேரின் ஜோடி, நடுவானில் ராட்சத பலூனில் பறந்தபடி திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு திருமண ஜோடி உள்பட 13 பேர் பலூனில் ஏறி பறக்க தொடங்கினர். மோதிரம் மாற்றி திருமண உறுதிமொழி எடுக்கும்போது, திடீரென காற்று பலமாக வீசியதால் பலூன் தாறுமாறாக பறந்தது. சிறிது நேரத்தில் தரையில் ஒரு வீட்டின் தோட்டத்தில் வந்து விழுந்தது. 13 பேரும் படுகாயம் அடைந்தனர்.