Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
09
Jan
‘நான் எக்ஸ்பிரஸ் கிடையாது ஸ்விங்தான் எனது பலம்’ : சொல்கிறார் புவனேஸ்வர் குமார்


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர்குமார் பாகிஸ்தானுக்கு எதிரான 2020 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 19 வயதான அவர் அணியின் வேகப் பந்து வீச்சுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். மிதமான வேகத்தில் பந்தை ஸ்விங் செய்வதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். பாகிஸ் தான் தொடரை தொடர்ந்து இங்கிலாந் துக்கு எதிரான தொடரி லும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கூறுகையில், இங்கிலாந் துக்கு எதிரான தொடர் சவால் நிறைந்தது. பாக். போட்டியில் செயல்பட்டதை போன்றே சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிப்பேன்.

முதல் ஆட்டத்திலேயே அதுவும் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியது எனது நம்பிக்கையை அதிகரித்துள் ளது. கடந்த 5 ஆண்டுகளாக பிளாட் டிராக்கில் எப்படி பந்துவீச வேண்டு மென நன்கு தெரிந்து வைத்துள் ளேன். நான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துவீசுவது கிடையாது. அது எனக்கு சரியும் வராது. மிதமான வேகத் தில் ஸ்விங் செய் வதே எனது பலம். எந்த நேரத் திலும் எனது ஸ்டைலை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஸ்விங் பந்துவீச்சு தான் சிறப்பாக செயல்பட உதவுகிறது. பவுலிங் போன்று பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். துலீப் கோப்பை யில் சதம் விளாசியுள் ளேன். பேட்டிங்கிற்காகவும் கூடுதல் பயிற்சி செய்கிறேன் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana