2வது பயிற்சி ஆட்டத்திலும் இங்கி. தோல்வி ஷிகார்தவான் சதம் விளாசல்
டெஸ்ட், 2020 தொடரை முடித்துக் கொண்டு தாயகம் சென்று திரும்பி வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வருகிற 11ந் தேதி ராஜ்காட்டில் நடக்கிறது. இதனிடையே இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டங்களில் ஆடிவருகிறது. இந்திய ஏ அணிக்கு எதி ரான முதல் ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று 2வது பயிற்சி ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து ஆடியது. முதலில் ஆடிய இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்தது. இயான்பெல் 125 பந்தில் 2 சிக்சர், 10 பவுண்டரியுடன் 108 ரன் விளாசினார். மோர்கன் 52, குப்தில் 44, கீஸ்விட்டர் 41 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய டெல்லி அபாரமாக ஆடி 48.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷிகார் தவான் 109 பந்தில் 3 சிக்சர், 14 பவுண்டரியுடன் 110 ரன்கள் விளாசினார். மிலிந்த்குமார் 78, பாத்தியா 45 ரன் எடுத்தனர்.