சிட்னியில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் லியாண்டர்பயஸ் (இந்தியா) ஸ்டெபனக் (செக்குடியரசு) ஜோடி 64, 46, 105 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரோஜர் வாஸ்லின் சிமோன் ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. ரோகன் போபண்ணா (இந்தியா) மெலோவ் (பிரேசில்) ஜோடி 46, 26 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் லோபஸ் கிரனோலர்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. காலிறுதியில் பயஸ் ஜோடி, ஸ்பெயினின் மரியோ வெர்டஸ்கோ ஜோடியை எதிர்கொள்கிறது.