Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
05
Jan
கட்டாயப்படுத்தினால் காதல் எப்படி வரும்?


காதலித்தே ஆக வேண்டும் என யாரும் யாரையும் மிரட்ட முடியாது. அப்படி மிரட்டினால் அவர்களை கைது செய்ய முடியும். ஆனால் அது தெரியாமல் பெண்கள் மிரண்டு போய் விடுகிறார்கள். செல்போனில் மார்பிங் செய்த படத்தை காட்டி மிரட்டியிருக்கிறார் ஒரு வாலிபர். இதுவே மிகப் பெரிய குற்றம். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார். இதுதொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் திமிரியை சேர்ந்தவர் சீதா. பிளஸ்2 முடித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். தனியார் ஐடிஐ கல்லூரி மாணவர். இவரும் சீதாவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சீதா விலக தொடங்கினார். சரத்குமார் ஆத்திரம் அடைந்தார்.

செல்போனில் சீதாவை படம் எடுத்து அதனுடன் தனது படத்தை இணைத்து மார்பிங் செய்தார். தன்னை காதலிக்காவிட்டால் படத்தை எல்லோரிடமும் காட்டி விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். செல்போனில் உள்ள படத்தை அழித்து விடும்படி சீதா பலமுறை கெஞ்சியுள்ளார். இந்நிலையில், சரத்குமார் செல்போனை நண்பர் ஏழுமலையிடம் கொடுத்து, சீதாவிடம் சென்று தன்னை காதலிக்க வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன்படி ஏழுமலை, சீதாவிடம் சென்று, Ôசரத்குமார் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். அவனை நீ காதலித்தே ஆக வேண்டும். இல்லை என்றால், செல்போனில் உள்ள படத்தை எல்லோரிடமும் காட்டி, உன் பெயரை கெடுத்து விடுவோம்Õ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

பலத்த தீக்காயமடைந்த அவரை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் வேலூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பதிவு செய்தார். போலீசார் சரத்குமார், ஏழுமலையை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உலகத்தில் பெண்களா இல்லை. விரும¢பாத பெண்ணை மிரட்டி காதலித்தால் என்ன பயன்? இதை ஏன் இளைஞர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? தான் விரும்பும் பெண்ணை விடவும் தன்னை விரும்பும் பெண்ணை காதலிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதை ஏன் அறிய மறுக்கிறார்கள். பெண்களும் இதுபோன்ற பிரச்னைகளை பெற்றோரிடம் தைரியமாக சொல்ல முன்வர வேண்டும். இதற்காக தற்கொலைக்கு முயல்வது முட்டாள்தனம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana