‘கிரீடம் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் ஜனவரி 9ம் தேதி முதல் நடக்க உள்ளது.
சித்தார்த் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி பட அறிமுக இயக்குனர் பாலாஜி மோகனின் அடுத்த படத்தையும் முதல்படத்தை தயாரித்த நிறுவனமே தயாரிக்கிறதாம்.
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘ஆதிபகவன் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. முன்னதாக இப்படம் பற்றி விவரங்கள் அடங்கிய வெப்சைட் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் மேக்கிங் ஆப் ஆதிபகவன் வெளியிடப்பட்டுள்ளதாம்.
இந்தியில் படங்களை இயக்கும் பிரபுதேவா ‘ஏபிசிடி படத்தில் நடிக்கிறார். தமிழில் அவர் ஆடிய ‘முக்காலா முக்காபலா பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடி இருக்கிறார். 3டி யில் இக்காட்சியை படமாக்கினார் இயக்குனர் ரெமோ டிசோசா.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook