அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் 28ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. அதன்பிறகு டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் ஐதராபாத்தில் சிவா இயக்கும் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் அஜீத்.
‘துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடிய விஜய் அடுத்து நடிக்கும் இயக்குனர் விஜய் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் பாடுகிறார். இது அவர் பாடும் 25வது பாடல். மும்பையில் பாடல் பதிவு நடக்க உள்ளது.
த்ரிஷாவின் டுவிட்டர் இணையதள பக்கத்தில் 4 லட்சம் பேர் அவரது ஃபாலோவராக இணைந்துள்ளனர். இதற்கு டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் த்ரிஷா.
‘எங்கேயும் எப்போதும் படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து 3 படங்களை தயாரிக்க உள்ளார். இந்த படங்களை மீண்டும், பாக்ஸ் ஸ்டார் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook