Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
25
Nov
பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை : புதிய எஸ்.பி. பேட்டி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருமலை: திருப்பதி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரபாகர்ராவ், கிருஷ்ணா மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஐதராபாத்தில் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக இருந்த ராஜசேகரபாபு திருப்பதி எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்ற ராஜசேகரபாபு ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வந்த எஸ்.பி. நிருபர்களிடம் கூறுகையில், திருமலைக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது முதல் கடமை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இந்த மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ளதால் ஒவ்வொன்றாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது திருமலை ஏ.டி.எஸ்.பி. உமாமகேஸ்வர சர்மா, டி.எஸ்.பி. நஞ்சுண்டப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement