சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் மரணம்
மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம், இன்று மரணம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் வி.என்.சிதம்பரம்(76). நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர். சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர். மதுரை சின்ன சொக்கிகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மனைவி கமலா, 3 மகன்கள் உள்ளனர். சில நாட்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டார். மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இன்று காலை 8 மணியளவில் இறந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான ராங்கியத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு பிறகு, நாளை உடல் தகனம் செய்யப்படுகிறது.