‘இரண்டாம் உலகம்’ படத்தில் முதல் பாதியில் துணிச்சலான கிராமத்துப் பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் டாக்டராகவும் நடிக்கிறார் அனுஷ்கா.
ஒலிம்பிக்கில் மெடல் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோம். அவரது ஸ்டைல், தோற்றம் பற்றி வீடியோவில் பார்த்து அறிந்த பிறகே ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வால் குத்து சண்டை வீராங்கனையாக நடித்தாராம்.
ஞாயிற்றுகிழமையென்றால் வீட்டில் மட்டன் பிரியாணி செய்வது தாத்தா சிவாஜி குடும்பத்தில் கடந்த 50 வருட பாரம்பரிய வழக்கம் என்கிறார் ‘கும்கி’ ஹீரோ விக்ரம் பிரபு.
‘டெல்லி பெல்லி’ இந்தி படம் தமிழில் கண்ணன் இயக்கத்தில் ‘சேட்டை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் இப்படத்தின் டைட்டில் ‘நாட்டி பாய்ஸ்’.
இந்தியில் அமிதாப் நடித்த ‘சர்கார்’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் எழுதிய சில வசனங்கள் மறைந்த பால் தாக்ரே சொன்ன வார்த்தைகளை பின்பற்றி எழுதியது என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook