மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) கான்ஸ்டபிள் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன. பணி:Constable (Trade - Technical) தகுதி: சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. தொழில் நுட்பத் தகுதி: கான்ஸ்டபிள்- பிட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Motor Vehicle Fitter (Automobiles)/ Motor Mechanic டிரேடில் ஐடிஐ முடித்திருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம். கான்ஸ்டபிள்-டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கனரக வான ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணிசெய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆள்சேர்ப்பின் போது விண் ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட டிரேடு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். வயது: 1.8.2012ன்படி 18 லிருந்து 25க்குள். உடல்தகுதி: ஆண்களுக்கு உயரம் 170 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ., எஸ்டி பிரிவு ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 155 செ.மீ. மார்பளவு: (ஆண்களுக்கு) சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டி பிரிவு ஆண்களுக்கு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை கிராஸ் செய்யப் பட்ட டிடி/போஸ்டல் ஆர்டர் ஆக The DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai, Tamilnadu 600065 என்ற பெயரில் எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.crpf.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai 600065. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.26.