மகா மக்கள் நீதிமன்றம் மூலம் 1200 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், மகா மக்கள் நீதிமன்றம் மூலம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான உடனடி தீர்வு காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சோமசேகரன் தலைமை வகித்தார். பார் அசோசியேஷன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். சார்பு நீதிபதி ராம், நீதித்துறை நடுவர் ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தனர். லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன், பார் அசோசியேஷன் செயலாளர் ஜனகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நீதிபதி சோமசேகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் சாலை விபத்து வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப் பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மக்கள் நீதிமன் றத்தின் பணி. அந்த வகையில் 1200 வழக்குகள் விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.