தவறை திருத்திகொள்வதில் சச்சின் புத்திசாலி : சொல்கிறார் கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ரஞ்சி கோப்பையில் பங்கேற்றுள்ளார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 137 ரன் அடித்து அசத்தினார். சமீபகாலமாக பார்ம் இல்லாமல் தவித்து வந்த அவர் சதம் அடித்துள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் சச்சின் அடுத்தடுத்து போல்டானார். சாம்பியன்ஸ் லீக் 20,20ல் முதல் ஆட்டத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக மாஜி கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறுகையில், தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வதில் சச்சின் மிகச்சிறந்தவர். வரும் ஆட்டங்களில் அவர் இந்த விஷயத்தில் நிச்சயம் கூடுதல் கவனம் செலுத்துவார். சச்சின் கடுமையாக உழைக்க கூடியவர். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று விட்டால் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்கலாம். முதல் ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணியால் தோல்வியில் இருந்து நிச்சயம் மீளமுடியாது என்றார்.