ஓட்டல் அறையில் வெளிநாட்டு இளம்பெண் தற்கொலை
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் செக் குடியரசை சேர்ந்த தன் நண்பர் ஒருவருடன் அல்பேனியாவை சேர்ந்த துரோ க்ளிடியா(29) தங்கியிருந்தார். அவர் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்திருந்தார்.
அவருடன் இருந்த வாலிபர் வெளியில் சென்று விட்டு அறைக்கு திரும்பியுள்ளார். உட்புறம் தாழிடப்பட்டிருந்த கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இது குறித்து ஹோட்டல் மேனேஜருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, துரோ க்ளிடியா தூக்கில் சடலமாக கிடந்தார். அவரது சடலம் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.