‘முகமூடி’ படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து ‘இடி மின்னல் காதல்’ என்ற படம் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
‘களவாணி’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ படத்தில் நடித்த ஓவியா அடுத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’, ‘மூடர் கூடம்’ படங்களில் நடித்தாலும் சொந்த ஊரான திருச்சூரிலிருந்து சென்னையில் குடியேறும் எண்ணம் இல்லையாம்.
சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ஹீரோ ஆதி விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் இளையராஜாவும் வந்தாராம். அவருடன் கலந்துரையாடியபடி பறந்த அனுபவத்தை ஆதியால் மறக்க முடியாதாம்.
பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெங்களூர் இசை கல்லூரியில் கர்நாடக இசை கற்று தேர்ந்தவர்.
‘அவன் இவன்’ பட ஹீரோயின் ஜனனி ஐயர் மலையாளத்தில் ‘த்ரி டாட்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook