கடலில் காணாமல் போகும் மீனவர்கள் கதை
சென்னை: மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பலர் காணாமல் போவதுபற்றிய கதை படமாகிறது. இயக்குனர் வெங்கடேஷ் குமார்.ஜி. இயக்கும் படம் ‘நீலம்’. இதுபற்றி அவர் கூறியதாவது: கடல் சார்ந்த படங்கள், மீனவர்கள் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்ட கதை அம்சத்துடன் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் கடினமான வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் அதே வேளையில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் பலர் காணாமல் போய்விடுகின்றனர்.
அவர்களில் சிலர் கண்டுபிடிக்கப்பட்டாலும் பலர் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போகிறது. காணாமல்போகும் அவர்களின் கதி என்ன என்பதை இக்கதை விளக்கும். காதல், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் இதன் ஸ்கிரிப்ட் அமைந்திருக்கிறது. படத்தின் 2ம் பாதியில் பெண்களே இல்லாத வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. கிஷோர் ஹீரோ. பவித்ரா, ஈஷா ஹீரோயின். எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு. சதீஷ் சக்ரவர்த்தி இசை. ப்ளுவேஸ் நிறுவனம் தயாரிப்பு. இப்படத்தின் ஷூட்டிங் தலைமன்னார், மண்டபம் பகுதிகளில் நடக்கிறது. இவ்வாறு வெங்கடேஷ் குமார் கூறினார்