காந்தி பெயர் சூட்டிய கற்பனை கிராம கதை
சென்னை: கிராமத்துக்கு ‘வெள்ளை கிராமம் என்று காந்தி பெயர் சூட்டுவதாக கற்பனை கதை படமாகிறது. இது பற்றி இயக்குனர் ஜுகைன் கூறியதாவது: மசாலா கதைகள் பெருகிவிட்ட நிலையில் காந்தியவாத கதையை இயக்க எண்ணினேன். அதுதான் வெள்ளை என்ற பெயரில் உருவாகிறது. குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் காந்தியை கடவுளாகவும் மனிதாபிமானத்தையே குணமாகவும் கொண்டு வாழ்கிறார்கள்.
இதைக்கேள்விப்பட்டு அங்கு வரும் காந்திஜி மக்களின் மனதை குறிக்கும் வகையில் கிராமத்துக்கு வெள்ளை என பெயரிடுகிறார். அமைதியாக திகழும் அந்த கிராமம் இயற்கை சீற்றத்தால் அழியும் அபாயம் ஏற்படுகிறது. அப்போது கதாநாயகன் அங்குள்ளவர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பது கிளைமாக்ஸ். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி அம்பாசமுத்திரத்தில் நடந்துள்ளது. உதய்குமார், சுப்ரஜா, அனுகிருஷ்ணா, ‘பிதாமகன்Õ மகாதேவன், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரதராஜன் இசை. கேசவ் ஒளிப்பதிவு. ரஞ்சித் கண்ணா, ரவீந்திரன் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் ஜுகைன் கூறினார்.