ரெப்கோ வங்கியில் புரொபஷனரி ஆபீசர்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள புரொபஷனரி ஆபீசர் பணிக்கு டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரொபஷனரி ஆபீசர்: 30 இடங்கள். சம்பளம்: ரூ.14,500- 25,700. வயது: 21 முதல் 30க்குள். தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். மேலும் புரொபஷனரி ஆபீசர் பணிக்காக நடத்தப்பட்ட ஐபிபிஎஸ்- 2011 பொது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐபிபிஎஸ்-2011 தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250/-இதை ஆன்லைன் முறையில் மாஸ்டர்/விசா டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். www.repcobank.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.5.