Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
15
Oct
பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணி படுகொலை


சித்தூர்: எட்டு மாத கர்ப்பிணியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தூர் அருகே நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் அடுத்த குடிபாலா மண்டலம் சீலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). இவர், வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி நதியா (24) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்தார். பிரசவத்துக்காக நதியா சில நாட்களுக்கு முன்பு தாளம்பேடுவில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சென்ற நதியாவை 4 பேர் திடீரென வழிமறித்து வாயை பொத்தி அருகே உள்ள முட்புதருக்கு தூக்கி சென்றனர். அங்கு 4 பேரும் நதியாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. விஷயம் ஊருக்கு தெரிந்துவிடுமோ என பயந்து நதியாவின் கழுத்து இறுக்கி கொலை செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த நதியாவின் கணவர் நித்தியானந்தம், முட்புதர் அருகே 4 பேர் நிற்பதை பார்த்துள்ளார். கும்பலில் இருந்த ஒருவன் உடனே கத்தியை காட்டி மிரட்டி திரும்பி செல்லுமாறு நித்தியானந்தத்தை எச்சரித்தான்.

சந்தேகம் அடைந்த அவர், ஊருக்கு சென்று கிராமத்தினரை அழைத்து வந்தார். அங்கு நதியா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து சித்தூர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து நதியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நதியாவை பலாத்காரம் செய்து கொன்றதாக அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் வீட்டை கல் வீசி தாக்கினர்.

அவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த மணவாளன், குபேந்திரன், கருணாநிதி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நதியா கொலை செய்யப்பட்டதற்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
chandran - salem
10/16/2012 -- 0:5:56

தயவு செய்து இவனுங்களுக்காவது தூக்கு தண்டனை கொடுங்கள் நீதிமன்றங்களே அதுவும் இந்த அம்மாவின் கணவனின் கையாலே அப்படி இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கவில்லையெனில் இந்த நாட்டு நீதிபதிகளும், காவல் துறையும், அரசாங்கமும் நாசமாய் போகட்டும் கடவுளே ப்ளீஸ்

shakthi - krishnagiri
10/16/2012 -- 8:45:28

இந்த நான்கு பெருடிய சாவு இதைவிட கொடுமையா இருக்கணும்

salu - erode
10/16/2012 -- 10:24:31

அவங்களுக்கு துக்கு தண்டனை குடுக்கணும் சும்மா விட கூடாது...

sasi - chennai
10/16/2012 -- 10:32:49

இந்த மாதீரி நாய்ங்கள அவாகளுடைய பிறப்புறுப்ப வேட்டிஎடுதுடுங்க சார். தண்டனைகள் அதிகமனல்தான் தவறுகள் கம்மியாகும். இதுவே மேலை நாடுகள்ன கண்டிப்பா இந்த தண்டனை நிறைவேற்றுவார்கள்..

bharath - salem
10/16/2012 -- 10:56:31

அவேனுங்க நாலு பேரோடத்தையும் அறுத்து எறியணும்

kamala - chennai
10/16/2012 -- 13:3:0

இவங்களை சும்மா விடகூடாது

ahmed - mumbai
10/16/2012 -- 14:36:36

அந்த பெண்ணை அவர்கள் கற்பளிதது உண்மை என்றால் அந்த நபர்களின் மர்ம உறுப்புகளை துண்டித்து அரவாணியாக ஆக்க வண்டும் இது நம் நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும்

KUMAR - SNGAPORE
10/16/2012 -- 14:59:33

இந்த மாதிரி ஆளுகள கொல்லனும்

tamil - sivagangai
10/16/2012 -- 15:9:52

இதுமிகவும் கண்டிக்க தக்கது

antony doss - chennai
10/16/2012 -- 15:39:2

இவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாம்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement