விளையாட்டு ஆணையத்தில் வேலை
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. 1. ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர்: 19 இடங்கள். தகுதி: உளவியல்/உடற்கூறு இயல்/உயிர் வேதியியல்/ உணவு மற்றும் சத்துணவு/ பயோ மெக்கானிக்ஸ்/ ஆந்த்ரோப் மெட்ரி/ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.
2. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: 5 இடங்கள் கல்வித்தகுதி: உளவியல்/உடற்கூறு இயல்/ உயிர் வேதியியல்/ உணவு மற்றும் சத்துணவு/ பயோ மெக்கா னிக்ஸ்/ ஆந்த்ரோப்மெட்ரி/ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம்.
www.sportsauthorityofindia.nic.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும். கடைசி நாள்: அக்.31.