Untitled Document
2012
05
Oct
ஓய்வு எப்போது? ; சச்சின் அதிரடி விளக்கம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் 'ஓய்வு எப்போது?' என்ற கேள்வியை தற்போது உலகமே கேட்டுக் கொண்டு வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை உட்பட தன் பக்கம் அத்தனை சாதனைகளையும் சாதகமாகிக் கொண்டாலும், சமீபத்தில் அவருடைய ஆட்டம், கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது போல காட்டுகிறது.

இந்தியாவின் தூண் என்று அழைக்கப்படும் இந்தியாவின் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரான ராகுல் டிராவிட், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில், தொடர்ந்து 4 முறை போல்ட் ஆனார். இதனையடுத்து டிராவிட் இங்கிலாந்து தொடருக்கு பிறகு தன் ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்திற்கு தொடரில் சச்சின் 3 முறை போல்ட் ஆனார். 'பலர் சச்சின் சாதனைக்காக தான் விளையாடுகிறார்' என்று கூறி வருகின்றனர். பாகிஸ்தானின் இம்ரான் கான், இந்தியாவின் சுனில் கவாஸ்கர், மற்றும் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் ஆகியோர், 'சச்சின் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கூறிவருகின்றனர். வயது 39 எட்டிய நிலையில் இன்னும் கிரிக்கெட்டில் சில காலம் மட்டும் விளையாட வாய்ப்பு நிலையில் அவரது ஓய்வு குறித்து 'Times of India' பத்திரிக்கையில் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

அவர் அளித்த சிறப்பு பேட்டி

ஓய்வு எப்போது?

'ஓய்வு பெறவது என்பது கடினமான ஒன்று, இப்போதைக்கு என் மனம் நான் நன்றாக விளையாடி வருகிறேன் என்று தான் சொல்கிறது, நான் ஓய்வு பெறுவது குறித்து என் மனம் தான் முடிவு செய்ய வேண்டும், இப்போதைக்கு ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை, இன்னும் என்னால் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் நவம்பர் மாதத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பிறகு ஓய்வை பற்றி வெளி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்வேன்'.

இந்த நாடு உங்களை நேசிக்கிறது.. ஏனென்றால் கிரிக்கெட் மூலம் நாட்டிற்கு பல பெருமையை சேர்த்துக்கிறீர்கள்.. தற்போது மக்களே உங்கள் ஓய்வு குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. கிரிக்கெட்டில் விளையாட உங்களையே நீங்கள் வற்புறுத்தி கொண்டீர்களா?

கடந்த 22 ஆண்டுகளாக என்னை நானே கிரிக்கெட்டில் விளையாட வற்புறுத்தி கொண்டு இருக்கிறேன், ஏனென்றால் இந்தியாவிற்கு விளையாடுவது என் கனவு, லட்சியம் கூட.. நாட்டிற்கு விளையாடுவது எப்போது எனக்கு பெருமையாக இருக்கும்.. ஆனால் என்னை நானே அதிகம் வற்புறுத்தி கொண்டதில்லை.. வெளிவரும் கருத்துகளுக்கு நான் சமரசம் செய்ய தயாராக இல்லை.. என் மனம் என்னை எப்போது நீ சரியாக விளையாடவில்லை என்று கூறுகிறதோ அன்று நான் ஓய்வு பெறுவேன்.

நீங்கள் அவுட்டாகினால் ஒரு போதும் கோபம் அடைந்ததில்லை, ஆனால் சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தொடர்ந்து 3வது முறையாக நீங்கள் போல்ட் ஆன போது, நீங்கள் உங்கள் பேட்டை கோபமாக உங்கள் காலில் தட்டியது ஏன்.. தொடர்ந்து போல்டாகி வருவது உங்களுக்கு நெருக்கடி தருகிறதா..

வாழக்கையில் பல தருணங்களில் எல்லாருக்கும் நெருக்கடி ஏற்படுவது இயல்பு தான். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் நெருக்கடி எந்த கட்டத்தில் வரும் என்ற குறிப்பிட்டு சொல்ல முடியாது.. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு நெருக்கடி நல்ல அனுபவத்தை தரும். அது உங்கள் திறமையை வெளிபடுத்தும். எந்த ஒரு பேட்ஸ்மேனும் அவுட்டாகுவதை விரும்புவதில்லை.. நானும் அப்படி தான்.. நான் அன்று கோபம் அடைந்ததற்கு காரணம், 'களத்தில் இருந்திருந்தால் இந்தியா வெற்றி அடைந்திருக்கும், ஆனால் அவுட்டாகி விட்டேன்', இது எனக்கு ஏமாற்றத்தை தந்தது அதனால் எனக்கு கோபம் வந்தது...

'தொடர்ந்து 2 முறையாக போல்டாகியுள்ளார்... அவரது Bat-க்கும் Pad-க்கும் நிறைய gap இருக்கிறது.. இது ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகல்ல' என்று சமீபத்தில் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.. உங்களை மிகவும் விரும்பிய ஒருவரே இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது எந்த விதத்தில் உங்களை பாதிக்கிறது...

சுனில் கவாஸ்கர் என்னை பற்றி நிறைய நல்ல கருத்துகளை தெரிவித்திருக்கிறார், அப்படியிருக்கும் போது எதற்காக அவரது எதிர்மறை கருத்துக்களை நான் எடுத்து கொள்ளவேண்டும். அவர் சொன்ன தவறை சரி செய்து கொள்வேன் தவிர தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

முன்னாள் கேப்டன் அசாருதீனும் உங்களது  footwork சரியில்லை என்று கூறியுள்ளார்.. அது பற்றி..

நான் Don Bradman-னை சந்தித்த போது, எனக்கு ஒரு அட்வைஸ் சொன்னார். அது என்ன தெரியுமா.. பேட்ஸ்மேன் 30 வயது பிறகு தனது ஆட்டத்தை நிதனமாக்கி கொள்ள வேண்டும் என்றார். 9 ஆண்டுகள் வரை அதிரடியாக ஆடினேன். வயது 30 ஆனதும் நிதான ஆட்டத்திற்கு மாற்றிவிட்டேன்..

ஓய்வு குறித்து நிறைய பேர் உங்களிடம் பேசியிருப்பார்களே?

என் வயது 25 இருக்கும் போது, எனக்கு Back pain இருந்தது என்னால் சிறப்பான ஆட்டத்ததை வெளிபடுத்த முடியவில்லை.. அப்போதே நிறைய பேர் என்னிடம் ஓய்வு குறித்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனால் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை, அன்று முதல் இன்று வரை என் மனம் அப்படியே தான் சொல்லி வருகிறது. அதற்கு பிறகு என்னுடைய வயது 39 ஆக இருக்கும் போது இதுபற்றி கேள்விகள் வரத் தொடங்கிவிட்டன. எனது மனது கூறிய ஆலோசனையின்படி நான் செய்யாமல் இருந்திருந்தால், உலக கோப்பையை பெற்ற இந்திய அணியில் இடம்பெற 22 ஆண்டுகள் நான் காத்திருக்கமாட்டேன்.

இன்னும் ஒரு அல்லது இரு ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடுவீர்களா..

இனி, ஒவ்வொரு தொடரின் போது என்னுடைய ஆட்டம் பொறுத்தே முடிவு செய்வேன்.. அதே சமயம் அணி நிர்வாகம் எடுக்கும் முடிவையும் கருத்தில் கொள்வேன்.. தற்போது என்னை நானே ஊக்கபடுத்தி வருகிறேன்.

ரசிகர்களின் ஓய்வு பற்றியான கருத்தை விட்டு விலக நினைக்க ஆசைப்படுகீறர்களா..

ஆம், நான் நன்றாக விளையாடினாலும் ரசிகர்களின் ஓய்வு பற்றியான கருத்துகளை விட்டு விலக நினைப்பேன். எனது சகோதர் எனக்கு தந்த அட்வைஸ் இது..

'190 அல்லது 200 டெஸ்ட் போட்டிகளை கடந்து முதல் வீரர் என்ற சாதனைக்காக சச்சின் ஓய்வை அறிவிக்காமல் வருகிறார்' என்று பலர் கூறும் கருத்து உண்மையா?

இல்லை, இனி ஒவ்வொரு தொடரின் போது என்னுடைய ஆட்டம் பொறுத்தே முடிவு செய்வேன்,, சாதனை நினைத்து விளையாடிதில்லை..

ஓய்வு அறிவிக்கும் போது உங்கள் மனநிலையும், சூழ்நிலையும் எப்படியிருக்கும்?

தெரியவில்லை, அது என்னுடைய வாழ்வில் கடினமனதாக இருக்கும்.. இதுபோன்று தருணங்களை நான் வாழ்வில் சந்தித்ததில்லை.. கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கிறேன்.. அதே சமயம் பொது வாழ்க்கையுடன் நான் ஒப்பிட போவதில்லை.. ஆனால் அன்றைய தினம் என் வாழ்வில் கடிமான நாளாக இருக்கும்..

எல்லா வகை போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவீர்களா அல்லது ஒருநாள் மற்றம் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பீர்களா?

இப்போதைக்கு என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை.. அதை நவம்பர் மாதம் தொடருக்கு பிறகு அறிவிக்கிறேன்...

சொந்த நாட்டில் விளையாடும் போதும் ஓய்வு பெறுவீர்களா அல்லது வெளிநாட்டிலா...

வெளிநாட்டில் அல்ல..

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil