திருப்பூர் :விவசாய பணிகளுக்கு கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையை, வேளாண் இயந்திரங்கள், கருவிகளை கொண்டு நிவர்த்தி செய்யும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 15 பேர் கொண்ட உழவர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் அரசு சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம், 4 பவர் டில்லர், 4 வீடர் மற்றும், 4 நெல் மாற்று நடவு இயந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்து 10 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குழுவுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. சமூக அக்கறையுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்கள், சிறு குறு விவசாயிகள் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சங்கமாக பதிவு செய்து குழு செயல்படுத்தப்பட உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook