செங்கம் :கிருஷ்ணகிரி மாவட்டம், குனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (30). இவரது மனைவி சென்னம்மாள் (25). நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 28ம்தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், சென்னம்மாளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். கடந்த 29ம்தேதி பெங்களூர் மருத்துவமனையிலேயே சுக பிரசவம் ஆனது. இதில் பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, சென்னம்மாள் கைக்குழந்தையுடன், தி.மலை மாவட்டம் செங்கம் தளவாய்நாய்க்கன்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். சென்னம்மாளுக்கு தொடர்ந்து டெங்கு காய்ச்சல் இருந்ததால், அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook