கோவை :கோவையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித் மகள் முஸ்கான்(11), ரித்திக்(8), கடந்த 29,10,2010ல் பள்ளி செல்லும் போது வேன் டிரைவர் மோகன்ராஜால் கடத்தி, கொலை செய்யப்பட்டனர். மோகன்ராஜும், கூட்டாளி மனோகரனும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் தப்ப முயன்றபோது மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். மனோகரன் மீதான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் மனோகரன் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று விசாரணையின் முடிவில், வழக்கை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் தள்ளிவைத்தார். அன்று அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல்கள் வாதம் நடக்கிறது. இதற்காக இருதரப்பு வக்கீல்கள், தங்கள் வாதத்தை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இரு தரப்பு வாதம் முடிந்த பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook