ஜெயவர்த்தனே: பாக். அணியின் சிறப்பான பந்துவீச்சால் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். எனினும் நம்பிக்கையுடன் ஆடினோம். மென்டிசும், ஹெராத்தும் தங்களது அனுபவத்தால் அசத்தி விட்டனர். பாக். வீரர்கள் இடதுகை சுழற்பந்து வீச்சில் திணறுவார்கள் என்பதாலேயே தனஞ்ஜெயாவுக்கு பதில் ஹெராத்தை களமிறக்கினோம். அது நல்ல பலனை கொடுத்தது.
முகமது ஹபீஸ்: மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சொதப்பி விட்டது. இந்த தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அப்ரிடி சிறந்த பேட்ஸ்மேன். இந்த தொடருக்காக அவர் கடுமையாக உழைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக பலன் கிடைக்கவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook