இவானோவிக் தோல்வி :சீனாவில் நடந்து வரும் டென்னிஸ் போட்டி 3வது சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக் 4,6, 3,6 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் ஓபிரான்டியிடமும், ஜெலினா ஜன்கோவிக் (செர்பியா) 5,7, 4,6 என்ற கணக்கில் ஸ்பெயினின் கர்லா நவேரோவாவிடம் தோல்வியடைந்தனர்.
தெ.ஆ.வில் சச்சின் :சாம்பியன் லீக் 20,20 தொடர் வருகிற 10,ந் தேதி தென் ஆப்ரிக்காவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சச்சின் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடரில் மும்பை தனது முதல் ஆட்டத்தில் 14,ந் தேதி லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
4 மாத ஒப்பந்தம் ஓகே :இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பீட்டர்சனுக்கு 4 மாத ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டர்சன் கூறுகையில், விரைவில் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவேன். 2015 உலககோப்பை வரை அனைத்து வகையான போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த கால சம்பவங்களில் இருந்து முன்னேறிச்செல்ல விரும்புகிறேன் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook