Untitled Document
2011
15
Mar
திமுக கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும் : தங்கபாலு


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனில் இன்று அளித்த பேட்டி: 63 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு நாளையும், நாளை மறுநாளும் சத்தியமூர்த்தி பவனில் பெறப்படுகிறது. போட்டியிட விரும்புபவர்கள், நேரடியாக வந்து பொது தொகுதிக்கு ரூ.5 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.2,500, பெண்கள் ரூ.2,500 செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்களை பரிசீலனை செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள், அதை பரிசீலனை செய்த பின் மேலிடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். மேலிட ஒப்புதலோடு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொகுதி பங்கீடு சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஐவர் குழு, தமிழகத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளது. தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த இரு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் முன்னுரிமை அளிப்போம். திமுக கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். அவர்களும் எங்கள் வெற்றிக்காக பாடுபடுவார்கள். இவ்வாறு தங்கபாலு கூறினார். இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமையுமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தேர்தல் முடிவுக்கு பின் தமிழக காங்கிரசார் மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல செய்தி வரும். வசந்த காலம் பிறக்கும் என்று தங்கபாலு பதிலளித்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me