ஜூட் விடும் காமெடி 13 வயசு நடிகை
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சந்தன காமெடி ஆக்டர் புதுசா கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்... நாளொன்றுக்கு 50 லகரம் கொடுக்கணும், குறைஞ்சது 6 டூ 10 நாளைக்கு கால்ஷீட் வாங்கிக்கணும்னு தயாரிப்புங்ககிட்ட சொல்றாராம். இதை கேட்டு தயாரிப்புங்க இடி விழுந்த மாதிரி ஷாக் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... ‘ரேட்டை ஏத்துன நடிகரு டேட்டையும் ஏத்துனா எப்படி கட்டுப்படியாகும்Õனு புலம்புறாங்களாம். ரெண்டு நாளு, மூணு நாளுக்கு மட்டும் கால்ஷீட் தாங்கன்னு கேட்டா அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க அங்க போங்கன்னு நடிகர் ஜூட் விடுறாராம்... விடுறாராம்...
கெட்டிமேளம் சத்தம் கேட்ட மறுநாளே இண்டஸ்ட்ரிக்கு முழுக்கு போடுற ஹீரோயின்களுக்கு மத்தில சுவேதமான நடிகை வித்தியாசம் காட்டியிருக்காராம். கெட்டி மேளம் கொட்டி, கர்ப்பிணியான பிறகு பிரசவ காட்சில நடிச்சி அசத்தினவரு, அதுக்கு முன்பே கர்ப்பணியா எப்படி நாட்களை கழிக்கிறாருன்ற சீன்கள்லேயும் நடிச்சாராம். ‘இப்படியெல்லாம் கூடவா நடிப்பாங்கனு கேட்டவங்களுக்கு, ‘இதுல என்ன தப்புÕன்னு நடிகை பதிலுக்கு கேட்கிறாராம்... கேட்கிறாராம்...
வயசு எகிறிட்டே போறதால கோலிவுட்லயிருந்த பல நடிகைங்க பாலிவுட்டுக்கு போறங்கன்னு லட்சுமிகர ஹீரோயின் சொல்றாராம்... சொல்றாராம்... ‘நீங்க எப்ப போகப்போறீங்கÕனு கேட்டா, ‘நான் இண்டஸ்ட்க்கு அறிமுகமானப்போ வயசு பதிமூணுதான். அதனால பாலிவுட்டுக்கு போற அவசரம் எனக்கில்ல. இன்னும் கொஞ்ச காலம் சவுத்லேயே நடிச்சிட்டு பிறகு அந்த பக்கம் போவேன்னு உஷாரா விளக்கம் தர்றாரு... தர்றாரு...
|