பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வி பிரிவில் வேலை
இந்திய ராணுவத்தின் X, சீ கல்விப்பிரிவில் (Army Educational Corps) சேர்ந்து ராணுவ வீரர்களுக்கு கல்வி கற்பிக்க பி.எட்., முடித்த பட்டதாரி/முதுகலை பட்டதாரி ஆண்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 92, அறிவியல் பிரிவு69, கலைப்பிரிவு23. வயது: 20 முதல் 25க்குள். தகுதி: குரூப் ‘எக்ஸ்’ பி.ஏ., பி.எட்., அல்லது பிஎஸ்சி., பி.எட்., அல்லது பிசிஏ/பிஎஸ்சி (ஐடி), பி.எட்., அல்லது எம்.ஏ.,/எம்.எஸ்சி.,/எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
குரூப் ‘‘ஒய்’’. பி.ஏ., அல்லது பி.எஸ்சி/ பிசிஏ/பி.எஸ்சி (ஐடி) முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி.,/பிசிஏ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரா னிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங் களில் ஏதாவது 2 பாடங் களை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும்.
பி.ஏ., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம், சமூகவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் 2 பாடங்களை டிகிரி படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: குரூப் எக்ஸ் மற்றும் குரூப் ஒய் பிரிவுக்கு பயிற்சியை முடித்த பின் ரூ.5,200 20,200 சம்பள விகிதத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
ஸ்கிரீனிங் தேர்வு, உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in இணையதளத்தையோ, செப்.17 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசையோ பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: HQ Rtg Zone, Fort Saint George, Chennai 600009.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.5.