| |||||
|
2011
15
Mar லக்னோ: கல்வி, அரசு வேலையில் தனி இடஒதுக்கீடு கோரியும், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர் பட்டியலில் சேர்க்க கோரியும் ‘ஜாட்’ இனத்தவர்கள் கடந்த 10 நாட்களாக போராடி வருகிறார்கள். உ.பி., பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடக்கிறது. ரயில், சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்த மாநிலங்களில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் நேற்று 77 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 27 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. லக்னோ மெயில், பத்மாவத் எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் ரத்தாகின. தொடர் ரயில் மறியல் போராட்டத்தால் இன்று 66 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்கள் நடந்த போராட்டத்தில் இதுவரை 434 ரயில்கள் நிறுத்தப்பட்டும், 320 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பப்பட்டும் உள்ளன. மேலும் சில
|
|