Untitled Document
2012
20
Sep
அண்ணா சாலையில் பாஜ மறியல்

சென்னை: டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளித்ததை ரத்து செய்ய வேண்டும், கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பாஜ சார்பில் அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமையில் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், மாநில துணை தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய, வட, தென் சென்னை மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட 400 பேர் சென்னை அண்ணா சாலையில் இன்று காலை திரண்டனர். அண்ணா சிலை அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விறகு கட்டைகளை அடுக்கி அடுப்பு வைத்து சமைக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து, பாஜவினர் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.  பாஜ மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு தடை விதிக்க வேண்டும், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். தேவையான அளவு சமையல் எரிவாயு வழங்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட்
சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்எல்ஏ பீமாராவ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம், மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி மற்றும் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை எரித்தனர். மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour