பள்ளிகள் நாளை இயங்கும்: தேர்வு நடக்கும், அரசு அறிவிப்பு
சென்னை: பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப் படி காலாண்டு தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்துள்ளதால் 20ம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று மதியம் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல இயங்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி காலாண்டு தேர்வு நடக்கும்’’ என்றார்.