இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
20: 20 உலககோப்பை கிரிக்கெட் திருவிழா இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உலககோப்பை போட்டி என்றால் துவக்கவிழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை முற்றிலும் மாறாக எந்தவித கொண்டாட்டங்கள் இல்லாமல் 20: 20 ஆட்டங்கள் தொடங்குகிறது. கலை நிகழ்ச்சிகள் கிடையாது. கண்ணுக்கு விருந்தளிக்கும் நடிகர், நடிகைகளின் குத்தாட்டமும் மிஸ்சிங். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகை யாக ரூ.5.5 கோடி வழங்கப்பட உள்ளது.
இன்று தொடங்கும் திருவிழா வருகிற 7ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இலங்கை அணியில் இம்முறை அனுபவ வீரர்களுடன் துடிப்பான இளம்வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
தில்ஷானுடன் புதுமுக வீரர் தில்ஷன்முனவீரா களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் இளம் சுழற்பந்து வீச் சாளர் தனஞ்ஜெயாவுக் கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். மலிங்காவின் யார்க்கர் எதிரணிக்கு சவாலாக இருக்கும். தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை களமிறங்குகிறது. ஜிம்பாப்வே அணி சமீபகாலமாக குறிப்பிடும்படி சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. அந்த அணி பிரன்டன் டெய்லர் தலைமையில் களமிறங்குகிறது. மசகட்சா, சிபந்தா நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.