Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
16
Sep
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் நிர்வாண படங்கள் வெளியீடு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன் :இங்கிலாந்து ஜூனியர் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மேலாடை இல்லாமல் இருக்கும் படங்களை பிரான்ஸ் வார இதழ் வெளியிட்டது. அதை பார்த்து அயர்லாந்து, இத்தாலி பத்திரிகைகளும் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் , டயானாவின் மகன்கள் வில்லியம்ஸ், ஹாரி. இவர்களில் வில்லியம்ஸ், கேத் மிடில்டனை திருமணம் செய்து கொண்டார். ஹாரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நியூயார்க்கில் விடுமுறையை கழிக்க சென்ற ஹாரி, ஓட்டலில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வில்லியம் , கேத் மிடில்டன் தம்பதி, விடுமுறையை கழிக்க சமீபத்தில் பிரான்ஸ் சென்றது. அங்கு மிடில்டன் மேலாடை இல்லாமல் வில்லியம்சுடன் சுற்றிய படங்களை பிரான்சில் இருந்து வெளிவரும் குளோசர் என்ற பிரபல வார இதழ் அட்டை படமாக நேற்று வெளியிட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ராணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வார இதழுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுக்க போவதாக ராணி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கேத் மேலாடை இல்லாமல் இருக்கும் 4 படங்கள் குளோசர் இதழில் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் வருங்கால ராணியை பாருங்கள், இதுபோல் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.. இனிமேலும் பார்க்க முடியாது என்று படவிளக்கங்கள் தந்துள்ளது.
இந்நிலையில் அயர்லாந்தில் இருந்து வெளிவரும் ஸ்டார் நாளிதழும் கேத் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளது. இதே போல, இத்தாலியில் இருந்து வெளிவரும் கிசுகிசு இதழ் சியும் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி பத்திரிகை இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு சொந்தமானது. இவர் பிரதமராக இருந்த போது டீன் ஏஜ் பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சை தொடர்ந்து மற்ற நாடுகளும் கேத் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டு வருவதால் ராணி குடும்பத்தினர் ஆவேசம் அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மீது வழக்கு தொடுப்போம் என்று எச்சரித்துள்ளது. ஆனால், சி எடிட்டர் அல்போன்சா சிக்னோரினி கூறுகையில், பிரான்சின் குளோசர் பத்திரிகையில் இருந்துதான் நாங்கள் எடுத்து வெளியிட்டோம். அதனால் வழக்கை பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
munees - Rajapalayam
9/16/2012 -- 15:58:56

aranmannai vi2ku ithuoru avamaam

natarajan - chennai
9/16/2012 -- 16:42:37

இங்கிலாந்தின் வருங்கால ராணியை பாருங்கள், இதுபோல் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.. இனிமேலும் பார்க்க முடியாது.....இனிமேலும் பார்க்க முடியாது என்று சொல்லமுடியாது.இதைவிட இன்னும் மோசமான படங்கள்கூட பார்க்க முடியும்.

DHANAPAL.S - CHENNAI
9/17/2012 -- 11:0:22

Dont public like this news. Because she have a one of the nation king wife..

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement