உலககோப்பை 20,20 போட்டியில் விளையாட இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 26 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாளை பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு கொழும்பில் நடக்கிறது. போட்டியை ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உலககோப்பை போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்பதால் வீரர்களுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த காம்பீரின் உடல்தகுதி குறித்து எந்தவித அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. எனவே அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம். அவருக்கு பதிலாக மனோஜ்திவாரி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா , பாகிஸ்தான் பயிற்சி ஆட்டம் தவிர நாளை 4 ஆட்டங்கள் நடக்கிறது. ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, வங்கதேசம் , அயர்லாந்து, நியூசிலாந்து , தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">