திருப்பூர் :மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2ம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3ம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன. 2ம் பருவத்திற்கான இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட பாடநூல¢ இருப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கோபால் கூறுகையில், ‘2ம் பருவ பாட புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. புத்தகங்கள் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான ¢அளவு பாட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள¢ளது’ என்றார்.
அன்பு ஆசிரியச் சொந்தங்களே வணக்கம்.
மாணவர்களின் மகி்ழ்ச்சிக்காக மனச்சோர்வு நீங்க அளிக்கப்படும் காலாண்டுத் தேர்வு விடுமுறையை 6 நாளாகக் குறைப்பது மாணவர்களின் படிக்கும் திறனைக்குறைக்கும் செயல். இது கன்டனத்திற்குரியது.