சூதாட்டம் வங்கதேச வீரருக்கு ஆயுட்கால தடை
வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷரிபுல் ஹக்கியூ சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசார ணை நடந்தது. அதில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட ஷரிபுலுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. வங்கதேசத்தில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை விதிக்கப்படும் முதல் கிரிக்கெட் வீரர் ஷரிபுல் ஆவார். இவர் 1998ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.