அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் அசரன்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் காலிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்கா 61, 46, 76(5) என்ற செட் கணக்கில் ஆஸி. வீராங்கனை சமந்தா ஸ்டாசரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் 4வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரர் 75, 76(2), 64 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு ஹாஸ்குயட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் அங்கு கடுமையான மழை பெய்ததால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதனால் ஷரபோவா பர்ட்டோலி, டெல்போர்ட்டோ ஆன்டிரோடிக், வாவ்ரிங்கா ஜெகோவிக், திப்சராவிக் பிலிப் ஆகியோர் மோதிய ஒற்றையர் போட்டிகளும், லியாண்டர்பயஸ், ஸ்டெபானிக் ஜோடி நோல்ஸ், பிலிப் ஜோடி மோதிய இரட்டையர் பிரிவு ஆட்டங்களும் பாதியில் நிறுத்தப்பட்டன.இந்த ஆட்டங்கள் இன்று நடைபெறும்.