Untitled Document
2012
03
Sep
செக்ஸ் மாத்திரையால் உல்லாசமாக இருந்தபோது அலறி துடித்த காதலன்


வாஷிங்டன்: காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது, வாலிபரின் ஆணுறுப்பில் திடீர் முறிவு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர், செக்ஸ் மாத்திரை நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் அட்ரியன் கார்ட்டர் (29). காதலியை சந்திப்பதற்காக ஹூஸ்டன் நகரில் உள்ள ‘ஸ்காட்டிஷ் இன்’ ரெஸ்டாரன்டில் ரூம் போட்டிருந்தார். வழியில் காரை நிறுத்தி, வீரிய மாத்திரை வாங்கினார். மாத்திரை போட்டு, காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது அந்த விபரீதம் நடந்தது. திடீரென ஆணுறுப்பில் பயங்கர வலி ஏற்பட்டது.

ரத்தப்போக்கும் ஏற்பட்டது. படுக்கை, டிரெஸிங் மேஜை, சுவர் என அறை முழுவதும் ரத்தம். அவரால் வலி பொறுக்க முடியவில்லை. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். கொரில்லா, சிம்பன்சி உள்ளிட்ட விலங்குகளின் ஆணுறுப்பில் எலும்பு உண்டு. ஆனால், மனிதனின் உறுப்பில் எலும்பு கிடையாது. கார்பஸ் கேவர்னோசா என்ற ஸ்பாஞ்ச் போன்ற பகுதியில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதுதான் விரைப்புத்தன்மையை தருகிறது. முழு விரைப்புத்தன்மையுடன் இருந்த நேரத்தில் கார்பஸ் கேவர்னோசா பகுதியில் முறிவு ஏற்பட்டு சிதைந்துள்ளது என்று டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். தாமதம் செய்தால் ஆணுறுப்பில் நிரந்தர வளைவு ஏற்படும்.

சிறுநீர் குழாய்கள் பாதிக்கப்படும் போன்ற அபாயங்கள் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பாதிக்கப்பட்ட கார்பஸ் பகுதியை டாக்டர்கள் அகற்றினர். வாழ்நாள் முழுவதும் அவர் இனி செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது. குழந்தை பெற முடியாது என்பதையும் தெரிவித்தனர். சம்பவம் நடந்தது சில மாதங்களுக்கு முன்பு. இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு செக்ஸ் மாத்திரை தயாரிக்கும் நிறுவனம்தான் காரணம் என்று ஹாரிஸ் கவுன்டி கோர்ட்டில் அட்ரியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘‘செவ்ரன் பெட்ரோல் பங்க்கை ஒட்டிய கடையில்தான் விரிலிஸ் புரோ வீரிய மாத்திரை வாங்கினேன். தைரியமாக சாப்பிடலாமா என்று கேட்டேன். ‘இயற்கையானது, பாதுகாப்பானது’ என்றார் கடைக்காரர். நம்பி பயன்படுத்திய எனக்கு அது ஆபத்தாக முடிந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார். மருந்து தயாரித்த நிறுவனம், வினியோகஸ்தர், மொத்த விற்பனையாளர், கடைக்காரர் என பலரையும் அவர் வழக்கில் சேர்த்துள்ளார். தனக்கு ஏற்பட்ட வலி, மன உளைச்சல், மருத்துவ செலவு, எதிர்கால பாதிப்புகள், செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாத நிலை, குழந்தை பெற முடியாதது எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர்களிடம் நஷ்டஈடு கேட்டுள்ளார். ஆணுறுப்பு முறிவுக்கு முழுக்க முழுக்க செக்ஸ் மாத்திரையை காரணம் சொல்ல முடியாது. முரட்டுத்தனமான செக்ஸ்தான் முக்கிய காரணம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour