சஹானாஸ் கருவுற்றதற்கு காரணம் யார்? கணவன், காதலர்களுக்கு டிஎன்ஏ சோதனை
சென்னை: கல்யாண ராணி சஹானாஸ் கருவுற்றதற்கு காரணம் யார் என்பதை கண்டறிய அவரது கணவன்கள், காதலர்களுக்கு டிஎன்ஏ சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சஹானாஸ் (30) நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். நகை, பணத்துக்காக 4 பேரை திருமணம் செய்து அவர் ஏமாற்றியுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்திருக்கிறார்.
தற்போது சஹானாஸ் 6 மாத கர்ப்பமாக உள்ளதால் அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை கண்டறிய கணவன், காதலர்கள் அனைவரிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது சஹானாஸ் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை கால்பந்து வீரர் பிரசன்னாதான் என்று சஹானாஸ் கூறி வருகிறார். அதற்கு பிரசன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சஹானாசின் கணவன்கள், காதலர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் சஹானாசின் கணவன்கள், காதலர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் சென்னையை விட்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டுள்ளனர். இதனால் போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
சஹானாசுக்கு மருத்துவ சோதனை
கைது செய்யப்பட்டுள்ள சஹானாஸ் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதிகளை அடைக்கும் சிறையிலேயே அவர் உள்ளார். சில தினங்களில் கைதிகள் சிறைக்கு அவர் மாற்றப்பட உள்ளார். சஹானாசுக்கு தற்போது வழக்கமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர். கர்ப்பமாக இருப்பதால் அவரது உயரம், எடை உள்ளிட்டவை கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அதன் அடிப்படையில் அவருக்கு உணவு வழங்கப்படும்.