கோவை :கோவை மாவட்டத்தில் ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனங்கள் முதலீட்டாளர்களை மோசடி செய்துள்ளன. இதில் கோவை மாநகர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட புறநகர், அவினாசி, அன்னூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1264 பேர் தங்களிடமிருந்து ரூ.27.46 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வரை புகார் அளித்துள்ளனர். இதில் ரூ.17.51 கோடி மோசடி செய்ததாக 747 முதலீட்டாளர்கள் சுசி ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தின் மீதும், ரூ.9.77 கோடி மோசடி செய்ததாக 452 முதலீட்டாளர்கள் குயின் ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தின் மீதும், ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக 10 பேர் எஸ்.எம்.ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தின் மீதும் புகார் அளித்துள்ளனர். இது தவிர, உடுமலைப்பேட்டையில் உள்ள சந்தியா நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் மீது ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக 55 முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook