Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
01
Sep
இன்டர்நெட்டில் நடிகையின் ஆபாச படம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தமிழ் நடிகை சுமாவின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்திருக்கிறார் சுமா. ‘துரை படத்தில் நடித்தவர் சுமா குஹா. அடுத்து ‘வனயுத்தம் படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: துரை படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். விரைவில் நான் நடித்த வனயுத்தம், அட்டகாசா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் பெங்களூரிலிருந்து எனது நண்பர் எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தார். இணையதளத்தில் என்னுடைய போட்டோக்களை யாரோ தவறாக பயன்படுத்தி ஆபாசமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து போலீசில் புகார் செய்திருக்கிறேன். ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது நான் இல்லை என்பதை எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த காரணமும் இல்லாமல் என்னை யாரோ குறித்து வைத்து தாக்கி இருக்கிறார்கள். இதனால் எனது கண்ணியம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது தந்தை டாக்டர், அம்மா ஆசிரியை, சகோதரர் இன்ஜினியர் என எல்லோருமே நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்கள் மன வேதனை அடைந்திருக்கிறார்கள். இவ்வாறு சுமா கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement